உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 நவம்பர் பக். 14-16
  • டிசம்பர் 30, 2024–ஜனவரி 5, 2025

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 30, 2024–ஜனவரி 5, 2025
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 நவம்பர் பக். 14-16

டிசம்பர் 30, 2024–ஜனவரி 5, 2025

சங்கீதம் 120-126

பாட்டு 144; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கோதுமை அறுவடையில் தங்களுக்குக் கிடைத்த அமோக விளைச்சலை இஸ்ரவேலர்கள் சந்தோஷமாகக் கொண்டுபோகிறார்கள்.

தங்கள் கடின உழைப்பை யெகோவா ஆசீர்வதித்ததால் தாய்நாட்டுக்குத் திரும்பிய இஸ்ரவேலர்கள் சந்தோஷப்படுகிறார்கள்

1. கண்ணீரோடு விதைத்தார்கள், சந்தோஷத்தோடு அறுத்தார்கள்

(10 நிமி.)

உண்மை வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்காக பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது இஸ்ரவேலர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் (சங் 126:1-3)

யூதேயாவுக்குத் திரும்பி வந்தவர்கள் ரொம்ப கடினமாக உழைக்க வேண்டியிருந்ததை நினைத்து அழுதிருக்கலாம் (சங் 126:5; w04 6/1 பக். 16 பாரா 10)

தொடர்ந்து கடினமாக வேலை செய்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் (சங் 126:6; w21.11 பக். 24 பாரா 17; w01 7/15 பக். 18-19 பாரா. 13-14; படத்தைப் பாருங்கள்)

நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்ய இஸ்ரவேலர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஒருவர் விதை விதைக்கிறார், இன்னொருவர் நிலத்தை உழுகிறார்.

யோசித்துப் பாருங்கள்: அர்மகெதோனில் இந்த பழைய உலகத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். பிறகு, பூமியைப் புதிதாக்கும் வேலை நடக்கும். அப்போது நமக்கு என்னென்ன சவால்கள் இருக்கலாம்? ஆனால், என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 124:2-5—இஸ்ரவேல் தேசத்தைப் பாதுகாத்ததைப் போல் யெகோவா தன் மக்களைப் பாதுகாப்பாரா? (cl பக். 73 பாரா 15)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 124:1–126:6 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. போன சந்திப்பில் அந்த நபர் பைபிளைப் பற்றி சில சந்தேகங்களைக் கேட்டிருக்கிறார். (lmd பாடம் 9 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 16 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 155

7. கடவுளுடைய வாக்குறுதிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட தன்னுடைய மக்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றினார். அவர்களுடைய குற்றங்களை மன்னித்து அவர்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார்; ஆன்மீக விதத்தில் குணப்படுத்தினார். (ஏசா 33:24) தாய்நாட்டில் அவர்கள் இல்லாத சமயத்தில், சிங்கம் போன்ற காட்டு மிருகங்கள் அங்கு அதிகமாகி இருந்தன. அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்த பிறகு, அவர்களையும் அவர்களுடைய மந்தைகளையும் அந்த மிருகங்கள் தாக்காமல் யெகோவா பாதுகாத்தார். (ஏசா 65:25) அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் வாழ்ந்தார்கள், தங்களுடைய தோட்டங்களில் விளைந்ததைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள். (ஏசா 65:21) அவர்கள் செய்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.—ஏசா 65:22, 23.

“சமாதானத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்​—⁠சில காட்சிகள்” என்ற வீடியோவில் இருக்கும் காட்சிகள். படத்தொகுப்பு: 1. சகோதர சகோதரிகள் பிக்னிக் போயிருக்கிறார்கள். 2. மலைகள் மற்றும் காடுகள் உயரத்திலிருந்து காட்டப்பட்டிருக்கிறது. 3. உயிர்த்தெழுப்பப்பட்ட தானியேல் தீர்க்கதரிசி காட்டில் நடந்துபோகிறார். 4. ஒரு தம்பதி, உயிர்த்தெழுப்பப்பட்ட தங்கள் மகளை கட்டிப்பிடிக்கிறார்கள். 5. ஒரு தட்டில் பழங்களும் காய்கறிகளும். 6. ஒரு நீர்வீழ்ச்சி.

Waterfall: Maridav/stock.adobe.com; mountains: AndreyArmyagov/stock.adobe.com

சமாதானத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • இந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்று எப்படி நிறைவேறி வருகின்றன?

  • புதிய உலகத்தில் இந்தத் தீர்க்கதரிசனங்கள் எப்படிப் பிரமாண்டமான விதத்தில் நிறைவேறும்?

  • எது நடப்பதைப் பார்க்க நீங்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 20 பாரா. 8-12, பக். 161-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 58; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்