உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜனவரி பக். 2-3
  • ஜனவரி 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜனவரி பக். 2-3

ஜனவரி 6-12

சங்கீதம் 127-134

பாட்டு 134; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பெற்றோர்களே—உங்கள் சொத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்

(10 நிமி.)

குடும்பத்தில் இருப்பவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள யெகோவா உதவுவார் என்று பெற்றோர்கள் நம்பலாம் (சங் 127:1, 2)

பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து (சங் 127:3; w21.08 பக். 5 பாரா 9)

ஒவ்வொரு பிள்ளையின் தேவைக்கு ஏற்ற மாதிரி பயிற்சி கொடுங்கள் (சங் 127:4; w19.12 பக். 26-27 பாரா 20)

ஒரு அப்பா, “என் பைபிள் பாடங்கள்” என்ற சிறுபுத்தகத்தை வைத்து தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். அந்தப் பிள்ளைகள் பூஞ்சோலை பூமியில் யானையோடும் குரங்கோடும் விளையாடுவதுபோல் கற்பனை செய்து பார்க்கிறார்கள்.

பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள யெகோவாவை நம்பி, தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும் பெற்றோர்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 128:3—பிள்ளைகள், ஒலிவமரக் கன்றுகள் போல இருக்கிறார்கள் என்று சங்கீதக்காரர் ஏன் சொன்னார்? (w00 5/15 பக். 27 பாரா. 3-5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 132:1-18 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 1 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஒருவர் பைபிள் போதனைக்கு எதிராக இருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். (lmd பாடம் 5 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 16 குறிப்புகள் 4-5. பைபிள் படிப்பை நடத்த உங்களால் போக முடியாது என்பதால், வேறு என்ன ஏற்பாடு செய்யலாம் என்று உங்கள் பைபிள் மாணவரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 13

7. பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஒரு அருமையான கருவி!

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவைப் பற்றி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக அமைப்பு எக்கச்சக்கமான விஷயங்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால், பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க, இருப்பதிலேயே அருமையான கருவி எது தெரியுமா? உங்களுடைய நல்ல உதாரணம்தான்!—உபா 6:5-9.

தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்க இயேசு இந்த அருமையான கருவியைப் பயன்படுத்தினார்.

யோவான் 13:13-15-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • இயேசு தன்னுடைய உதாரணத்தின் மூலமாக கற்றுக்கொடுத்தது ஏன் ஒரு சிறந்த வழி என்று சொல்லலாம்?

நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் எவ்வளவு பயனுள்ளது என்பதை உங்கள் செயல்களைப் பார்த்தே பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் ஒரு நல்ல உதாரணமாக இருந்தீர்கள் என்றால், நீங்கள் சொல்லும் விஷயத்தைப் பிள்ளைகள் மதிப்பார்கள், அதன்படி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

படத்தொகுப்பு: “முன்மாதிரியால் கற்றுக்கொடுத்தோம்” என்ற வீடிHS-.25யோவில் வரும் காட்சிகள். 1. கார்சியா குடும்பத்தில் இருப்பவர்கள் கூட்டங்களுக்குப் போக காரில் உட்கார்ந்திருக்கிறார்கள். 2. கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு ஒன்றாக உட்கார்ந்து நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டு சந்தோஷமாகப் பேசி சிரிக்கிறார்கள். 3. சகோதரர் கார்சியா, படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி தன்னுடைய மகள்களில் ஒருவரிடம் பேசுகிறார். 4. சகோதரர் மற்றும் சகோதரி கார்சியா பைபிளை வைத்து தன்னுடைய மகள்களில் ஒருவரிடம் பேசுகிறார்கள்.

முன்மாதிரியால் கற்றுக்கொடுத்தோம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • சகோதரர் மற்றும் சகோதரி கார்சியா, தங்களுடைய மகள்களுக்கு என்ன முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்கள்?

  • தொடர்ந்து பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்க இந்த வீடியோ உங்களை எப்படித் தூண்டியது?

உங்கள் உதாரணம் மூலமாக பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுக்கலாம் . . .

  • பொழுதுபோக்கு, சோஷியல் மீடியா, மதுபானம் குடிப்பது போன்றவற்றில் நல்ல தீர்மானங்களை எடுக்க

  • வணக்க விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க

  • தன்னுடைய துணையை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்த

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 20 பாரா. 13-20

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 73; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்