உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 மார்ச் பக். 14-15
  • ஏப்ரல் 28–மே 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 28–மே 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 மார்ச் பக். 14-15

ஏப்ரல் 28–மே 4

நீதிமொழிகள் 11

பாட்டு 90; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. சொல்லாதீர்கள்!

(10 நிமி.)

“அடுத்தவர்களை” காயப்படுத்துகிற மாதிரி எதையும் சொல்லாதீர்கள் (நீதி 11:9; w02 5/15 பக். 26 பாரா 4)

பிரிவினையை உண்டாக்குகிற மாதிரி எதையும் சொல்லாதீர்கள் (நீதி 11:11; w02 5/15 பக். 27 பாரா. 2-3)

ரகசியங்களைச் சொல்லாதீர்கள் (நீதி 11:12, 13; w02 5/15 பக். 27 பாரா 5)

ராஜ்ய மன்றத்தில் இரண்டு சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர், அவர்களைப் பார்த்தபடி நடந்து வருகிற வேறொரு சகோதரரைப் பற்றித் தப்புத் தப்பாகப் பேசுகிறார்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: லூக்கா 6:45-ல் இருக்கிற இயேசுவின் வார்த்தைகள் புண்படுத்துகிற பேச்சைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவும்?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 11:17—கருணை காட்டுவது நமக்கு எப்படி நன்மை தரும்? (g20.1 பக். 11, பெட்டி)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 11:1-20 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவரிடம் சொல்ல முயற்சி செய்யுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சியில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(4 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லிவிட்டு, அது எப்படி இருக்கும் என்று காட்டுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 157

7. சமாதானத்தைக் கெடுக்கும் விதத்தில் பேசாதீர்கள்!

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், தவறாகப் பேசிவிடுகிறோம். (யாக் 3:8) ஆனால், தவறாகப் பேசுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று யோசித்துப் பார்த்தால், அப்படிப் பேசுவதைத் தவிர்ப்போம். பின்னால் வருத்தப்பட வேண்டிய அவசியமும் இருக்காது. சபையின் சமாதானத்தைக் கெடுத்துப்போடும் சில வகையான பேச்சுகள் இவைதான்:

  • பெருமையடிப்பது. பெருமையடிப்பது என்றால் நம்மைப் பற்றியே பெருமையாகப் பேசுவது. இந்த மாதிரி பேசுவது போட்டி பொறாமையைத் தூண்டிவிடும்.—நீதி 27:2

  • பொய் பேசுவது. அப்பட்டமாகப் பொய் பேசுவது மட்டுமல்ல, தெரிந்தே ஒருவரைத் தவறான முடிவுக்கு வர வைப்பதும் பொய் பேசுவதுதான். ஒரே ஒரு தடவை பொய் சொன்னால்கூட மற்றவர்களுக்கு நம்மேல் இருக்கும் நம்பிக்கை போய்விடும், நம்முடைய பெயரும் கெட்டுவிடும்.—பிர 10:1

  • வீண்பேச்சு. மற்றவர்களைப் பற்றியோ அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியோ தேவையில்லாமல் பேசுவதுதான் வீண்பேச்சு. வீண்பேச்சு பேசுகிறவர்கள் உண்மைகளைத் திரித்துச் சொல்வார்கள், மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை அநாவசியமாகப் பேசுவார்கள். (1தீ 5:13) இதனால் சண்டைகளும் பிரிவினைகளும்தான் ஏற்படும்

  • ஆவேசமான பேச்சு. நம்மைக் காயப்படுத்துகிறவர்களிடம் கோபத்தில் பொறிந்துதள்ளுவதுதான் ஆவேசமான பேச்சு. (எபே 4:26) இது அவர்களைப் புண்படுத்தும்.—நீதி 29:22

“சமாதானத்தைக் கெடுக்கும் சுபாவத்தை ‘களைந்துபோடுங்கள்’​—⁠சில காட்சிகள்” என்ற வீடிHS-.25யோவில் வரும் காட்சிகள். 1. சகோதரிகள் எமிலியும் சிலியாவும் ஒரு காஃபி கடையில் எதிரெதிரே உட்கார்ந்திருக்கிறார்கள். சகோதரி ஹெலி சோஷியல் மீடியாவில் போட்டிருக்கும் போஸ்ட்டுகளை சிலியா பார்க்கிறார். 2. ராஜ்ய மன்றத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சகோதரி ஹெலி சகோதரி சிலியாவிடம் கோபமாகப் பேசுகிறார்.

சமாதானத்தைக் கெடுக்கும் சுபாவத்தை ‘களைந்துபோடுங்கள்’—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • நம்முடைய பேச்சு எப்படி சபையின் சமாதானத்தை ரொம்ப சுலபமாகக் கெடுத்துப்போடலாம் என்பதைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சண்டை போட்டுக்கொண்டவர்கள் எப்படி சமாதானம் ஆனார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, ‘சமாதானத்தைத் தேடி, அதற்காகப் பாடுபடுங்கள்’ என்ற வீடியோவைப் பாருங்கள்.

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 25 பாரா. 14-21

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | 2025 மாநாட்டுக்கான புதிய பாடல்; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்