உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜூலை பக். 8-9
  • ஜூலை 28–ஆகஸ்ட் 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 28–ஆகஸ்ட் 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜூலை பக். 8-9

ஜூலை 28–ஆகஸ்ட் 3

நீதிமொழிகள் 24

பாட்டு 38; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. நெருக்கடியான சமயங்களை மனபலத்தோடு சமாளிக்க...

(10 நிமி.)

அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள் (நீதி 24:5; it-2 பக். 610 பாரா 8)

நீங்கள் சோர்ந்துபோயிருந்தாலும், தவறாமல் பைபிளைப் படியுங்கள், ஜெபம் செய்யுங்கள், கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள் (நீதி 24:10; w09 12/15 பக். 18 பாரா. 12-13)

யெகோவாமேல் பலமான விசுவாசமும் அன்பும் இருந்தால் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்தும் மீண்டுவர முடியும் (நீதி 24:16; w20.12 பக். 15)

மோசமான உடல்நலப் பிரச்சினை இருக்கும் ஒரு சகோதரி இன்னொரு சகோதரியோடு சேர்ந்து சந்தோஷமாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார். வீட்டில் இருப்பவரிடம் தன்னுடைய டேப்லெட்டிலிருந்து எதையோ காட்டுகிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 24:27—இந்த நீதிமொழியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w09 10/15 பக். 12)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 24:1-20 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சாட்சி கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பே உரையாடல் முடிந்துவிடுகிறது. (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 4)

6. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

7. பேச்சு

(3 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 11—பொருள்: பைபிள் மூலம் கடவுள் நம்மிடம் பேசுகிறார். (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 99

8. நெருக்கடியான சமயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

திடீரென்று பயங்கரமான ஒரு நோய் பரவலாம், இயற்கைப் பேரழிவு நடக்கலாம், கலவரமோ போரோ வெடிக்கலாம், அல்லது துன்புறுத்தல் வரலாம். இப்படிப்பட்ட நெருக்கடியான சமயங்களில், பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள், உற்சாகம் தருகிறார்கள். நாம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றால்கூட, பாதிக்கப்பட்டவர்களின் வேதனையைப் புரிந்துகொள்கிறோம், முடிந்தளவு உதவியும் செய்கிறோம்.—1கொ 12:25, 26.

படங்களின் தொகுப்பு: சகோதர சகோதரிகள் வித்தியாசமான விதங்களில் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். 1. இயற்கைப் பேரழிவால் நாசமான ஒரு ராஜ்ய மன்றத்தை சகோதர சகோதரிகள் திரும்பக் கட்டுகிறார்கள். 2. அகதிகளாக வந்திருக்கும் ஒரு அம்மாவையும் அவருடைய மகளையும் சகோதர சகோதரிகள் பாசமாக வரவேற்கிறார்கள். 3. ராஜ்ய மன்றத்தில் இருக்கும் நன்கொடைப் பெட்டியில் ஒரு சகோதரி நன்கொடை போடுகிறார். 4. அகதிகளாக வந்திருக்கும் சகோதர சகோதரிகளுக்குத் தேவையான பொருள்களை ராஜ்ய மன்றத்தில் இருக்கும் சகோதர சகோதரிகள் கொடுக்கிறார்கள். 5. வாலண்டியர்கள் தண்ணீர் பாட்டில்களைக் கொடுக்கிறார்கள். 6. ஒரு சகோதரர் ஜெபம் செய்கிறார்.

1 ராஜாக்கள் 13:6-ஐயும், யாக்கோபு 5:16-ன் கடைசி வரியையும் வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • கடவுளுடைய மக்கள் ஒருவருக்காக ஒருவர் செய்யும் ஜெபங்கள் ஏன் வலிமையுள்ளது?

மாற்கு 12:42-44 மற்றும் 2 கொரிந்தியர் 8:1-4-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • கஷ்டத்தில் இருக்கிற சகோதரர்களுக்கு உதவுவதற்காக உலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இல்லையென்றாலும், கொடுக்க முடிந்ததைக் கொடுக்க நாம் ஏன் தயங்கக் கூடாது?

தடைகளின்போது சகோதரர்களை பலப்படுத்தினார்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • கிழக்கு ஐரோப்பாவில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்தபோது, சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்காக என்னென்ன தியாகங்களைச் செய்தார்கள்?

  • ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற கட்டளைக்கு சகோதரர்கள் அந்தச் சமயத்திலும் எப்படிக் கீழ்ப்படிந்தார்கள்?—எபி 10:24, 25

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 4-5

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 112; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்