நவம்பர் 3-9
உன்னதப்பாட்டு 1-2
பாட்டு 132; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ஒரு உண்மையான காதல் கதை
(10 நிமி.)
[உன்னதப்பாட்டு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
சாலொமோன் சூலேமியப் பெண்ணைப் புகழ்ந்து தள்ளினார்; அவளுக்கு நிறையப் பரிசுகளைக் கொடுப்பதாகச் சொன்னார் (உன் 1:9-11)
சூலேமியப் பெண், மேய்ப்பனை உயிருக்கு உயிராக காதலித்ததால் அவனுக்கு உண்மையாக இருந்தாள் (உன் 2:16, 17; w15 1/15 பக். 30 பாரா. 9-10)
டிப்ஸ்: உன்னதப்பாட்டு புத்தகத்தைப் படிக்கும்போது, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கும் “முக்கியக் குறிப்புகள்” பகுதியைப் பயன்படுத்தி, யார் யாரிடம் பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
உன் 2:7—சூலேமியப் பெண்ணிடமிருந்து கல்யாணமாகாத கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w15 1/15 பக். 31 பாரா 11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) உன் 2:1-17 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. சீஷர்களை உருவாக்குவது
பாட்டு 46
7. “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”
(15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு.
நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவும்போது நமக்கும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும், நம் உதவியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். ஏனென்றால், தாராள குணமுள்ளவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார். (நீதி 22:9) யெகோவாவைப் போலவே நடந்துகொள்வதால் நமக்கு சந்தோஷம் கிடைக்கும், யெகோவாவும் நம்மை ஏற்றுக்கொள்வார்.—நீதி 19:17; யாக் 1:17.
தாராளமாகக் கொடுங்கள், சந்தோஷமாக இருங்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் கொடுத்த நன்கொடையால் வீடியோவில் வந்தவர்களுக்கு எப்படிச் சந்தோஷம் கிடைத்தது?
மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்ததால் இவர்களுக்கும் எப்படிச் சந்தோஷம் கிடைத்தது?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 32-33