நவம்பர் 10-16
உன்னதப்பாட்டு 3-5
பாட்டு 31; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. மனம் அழகாக இருப்பதுதான் முக்கியம்
(10 நிமி.)
சூலேமியப் பெண்ணின் மனம் அழகாக இருந்ததை அவளுடைய பேச்சு காட்டியது (உன் 4:3, 11; w15 1/15 பக். 30 பாரா 8)
யெகோவாவின் ஒழுக்க நெறிகளுக்கு கீழ்ப்படிந்ததால், அவள் ஒரு அழகான தோட்டம்போல் இருந்தாள் (உன் 4:12; w00 11/1 பக். 11 பாரா 17)
பார்ப்பதற்கு அழகாக இருப்பதைவிட மனம் அழகாக இருப்பதுதான் முக்கியம்; நம் எல்லாராலும் அப்படி இருக்க முடியும் (g04 12/22 பக். 9 பாரா. 2-5)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்களிடம் எனக்கு என்னென்ன குணங்கள் பிடிக்கும்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
உன் 3:5—‘எருசலேம் மகள்களை’ எதற்காக ‘கலைமான்கள்மேலும் பெண் மான்கள்மேலும்’ ஆணையிடும்படி சூலேமியப் பெண் கேட்கிறாள்? (w06 11/15 பக். 18 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) உன் 4:1-16 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நேரடியாகச் சொல்லுங்கள். (lmd பாடம் 6 குறிப்பு 4)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. jw.org-ல் அவருடைய மொழியிலே தகவல்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்று காட்டுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) ijwbq கட்டுரை 131—பொருள்: மேக்கப் போடுவதையும் நகைகள் அணிவதையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (th படிப்பு 1)
பாட்டு 36
7. எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் (ஆதி 28:2)
(8 நிமி.)
8. நீங்கள் ஒரு நல்ல துணையாக இருக்க...
(7 நிமி.) கலந்துபேசுங்கள்.
ஒரு பொருத்தமான துணையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அவரிடம் நீங்கள் என்னென்ன குணங்களைப் பார்ப்பீர்கள்? கல்யாணம் செய்யும் எண்ணத்தோடு யாராவது உங்களைக் கவனித்தால், உங்களிடம் இருக்கும் அழகான கிறிஸ்தவ குணங்கள் அவருக்கு பளிச்சென்று தெரியுமா? ஒருவர் நல்ல கிறிஸ்தவரைப் போல் நடித்தாலும், வேறு வேறு சூழ்நிலைகளில் அவரைக் கவனிக்கும்போது, அவரிடம் உண்மையிலேயே நல்ல குணங்கள் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
ஒரு கிறிஸ்தவருக்கு இருக்க வேண்டிய சில குணங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குணங்களுக்குப் பொருத்தமான வசனத்தை அதற்குக் கீழே எழுதுங்கள்.
யெகோவாமேல் அன்பும் விசுவாசமும்
நல்ல குடும்ப தலைவராக அல்லது கணவருக்கு மதிப்பு கொடுக்கும் மனைவியாக இருப்பது
சுயநலமில்லாத அன்பு, தியாகம் செய்யும் மனம்
யோசித்து முடிவெடுப்பது, சமநிலையோடு இருப்பது, நியாயமானவராக இருப்பது
கடின உழைப்பு, சுறுசுறுப்பு
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 34-35