உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 நவம்பர் பக். 6-7
  • நவம்பர் 17-23

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 17-23
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 நவம்பர் பக். 6-7

நவம்பர் 17-23

உன்னதப்பாட்டு 6-8

பாட்டு 34; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. மதிலாக இருங்கள், கதவாக இருக்காதீர்கள்!

(10 நிமி.)

கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சூலேமியப் பெண்ணின் அண்ணன்கள் அவளிடம் எதிர்பார்த்தார்கள் (உன் 8:8, 9; it “உன்னதப்பாட்டு” பாரா 11)

ஒழுக்கங்கெட்ட ஆசைகளை எதிர்த்து நின்றதால் அவளுக்கு மனஅமைதி கிடைத்தது (உன் 8:10; yp பக். 188 பாரா 2)

இந்த விஷயத்தில், இளைஞர்களுக்கு அவள் ஒரு நல்ல முன்மாதிரி (yp2 பக். 33)

ஒரு கல் சுவருக்கு முன்பு மூன்று இஸ்ரவேல் ஆண்கள் தங்கள் கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் சபையில் இருக்கும் கல்யாணம் ஆகாதவர்கள், கதவாக இல்லாமல் மதிலாக இருப்பதற்கு நான் எப்படி அவர்களுக்கு உதவலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • உன் 8:6—உண்மையான அன்பை ஏன் “‘யா’வின் ஜுவாலை”என்று சொல்கிறோம்? (w15 1/15 பக். 29 பாரா 3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) உன் 7:1-13 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். jw.org கான்டாக்ட் கார்டைப் பயன்படுத்தி பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

6. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நட்பாக பேச ஆரம்பியுங்கள். நீங்கள் சாட்சிக் கொடுக்க ஆரம்பிப்பதற்குள் உரையாடல் முடிந்துவிடுகிறது. (lmd பாடம் 2 குறிப்பு 4)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 43—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் டேட்டிங் செய்வதற்கென்று சட்டம் வைத்திருக்கிறார்களா? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 121

8. பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

உன்னதப்பாட்டு புத்தகத்தில் வரும் மேய்ப்பன், கொஞ்ச தூரம் தனியாக நடந்துவிட்டு வருவதற்காக சூலேமியப் பெண்ணைக் காதலோடு கூப்பிட்டான். (உன் 2:10-14) ஒருவேளை, அவனுக்கு எந்த தப்பான எண்ணமும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், சூலேமியப் பெண்ணின் அண்ணன்கள், மேய்ப்பனோடு அவள் போக முடியாதபடி அவளுக்கு வேலையைக் கொடுத்தார்கள். (உன் 2:15) அவள் தன் காதலனோடு தனியாக இருந்தால் தப்பு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, அதற்கான ஆசையும் வந்துவிடலாம் என்பதை அவளுடைய அண்ணன்கள் புரிந்துவைத்திருந்தார்கள்.

“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (1கொ 6:18) பாலியல் முறைகேட்டில் கொண்டுபோய்விடும் எந்தவொரு விஷயத்தையும் நாம் செய்துவிடவே கூடாது. உன்னதப்பாட்டு புத்தகத்தை எழுதியவர்தான் இதையும் சொன்னார்: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதி 22:3.

‘இருதயத்தின் அந்தரங்கங்களை கடவுள் அறிந்திருக்கிறார்’ என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • இந்த வீடியோவிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

    ‘இருதயத்தின் அந்தரங்கங்களை கடவுள் அறிந்திருக்கிறார்’ என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. அதில் ஒரு சகோதரருக்கு கூட்டம் நடக்கும் நேரத்தில் ஒரு மெசேஜ் வருகிறது.
    ‘இருதயத்தின் அந்தரங்கங்களை கடவுள் அறிந்திருக்கிறார்’ என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. அந்தச் சகோதரர் ஸ்கூலில் ஒரு பெண்ணுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார், அவள் அந்தச் சகோதரரின் கையைப் பிடிக்கிறாள்.
    ‘இருதயத்தின் அந்தரங்கங்களை கடவுள் அறிந்திருக்கிறார்’ என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தச் சகோதரர் தன் அப்பா-அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 36-37

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 51; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்