நவம்பர் 24-30
ஏசாயா 1-2
பாட்டு 44; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “குற்றத்துக்குமேல் குற்றம்” செய்தவர்களுக்கு நம்பிக்கை
(10 நிமி.)
[ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
கடவுளுடைய மக்கள் “குற்றத்துக்குமேல் குற்றம்” செய்தார்கள் (ஏசா 1:4-6; ip-1 பக். 14 பாரா 8)
அவர்கள் மனம் திருந்தினால், அவர்களை முழுமையாக மன்னிக்க யெகோவா தயாராக இருந்தார் (ஏசா 1:18; ip-1 பக். 28-29 பாரா. 15-17)
யோசித்துப் பாருங்கள்: மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரிய பாவத்தை செய்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இஸ்ரவேல் மக்களை மன்னிக்க யெகோவா தயாராக இருந்ததைப் பற்றித் தெரிந்துகொள்வது உங்களுக்கு எப்படி மனசமாதானத்தைக் கொடுக்கும்?
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 2:2—“யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை” எதைக் குறிக்கிறது? (ip-1 பக். 39 பாரா 9)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 2:1-11 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். நீங்கள் பேச போயிருந்த விஷயத்துக்கு பதிலாக வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச அவர் நினைக்கிறார். (lmd பாடம் 7 குறிப்பு 4)
6. பேச்சு
(5 நிமி.) ijwbq கட்டுரை 96—பொருள்: பாவம் என்றால் என்ன? (th படிப்பு 20)
பாட்டு 38
7. யெகோவாவின் நண்பனாகு!—யெகோவா மன்னிப்பாரு!
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால், முன்கூட்டியே தேர்ந்தெடுத்த பிள்ளைகளை மேடைக்கு வரச்சொல்லி, இந்த வீடியோவைப் பற்றியும் இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள் என்பதைப் பற்றியும் கேளுங்கள்.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடம் 38, பகுதி 7—முன்னுரை, பாடம் 39