டிசம்பர் 22-28
ஏசாயா 11-13
பாட்டு 14; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. மேசியாவைப் பற்றி பைபிள் சொன்ன சில விஷயங்கள்
(10 நிமி.)
ஈசாயின் மகனான தாவீதின் வம்சத்தில் அவர் வருவார் (ஏசா 11:1; ip-1 பக். 159 பாரா. 4-5)
அவரிடம் கடவுளுடைய சக்தி இருக்கும், அவர் யெகோவாவுக்குப் பயந்து நடப்பார் (ஏசா 11:2, 3அ; ip-1 பக். 159 பாரா 6; பக். 160 பாரா 8)
அவர் நீதியோடும் இரக்கத்தோடும் தீர்ப்பு கொடுப்பார் (ஏசா 11:3ஆ-5; ip-1 பக். 161 பாரா. 9, 11)
யோசித்துப் பாருங்கள்: எந்த மனிதனையும்விட இயேசுவினால் மட்டும்தான் சிறந்த விதத்தில் ஆட்சி செய்ய முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 11:10—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ip-1 பக். 165-166 பாரா. 16-18)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 11:1-12 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) பொது ஊழியம். பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். அவர் கேட்கும் கேள்விக்கு jw.org-லிருந்து பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) உங்களோடு சேர்ந்து உங்கள் மாணவரும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யப்போகிறார். அதற்குத் தயாரிக்க அவருக்கு உதவுங்கள். (lmd பாடம் 11 குறிப்பு 4)
பாட்டு 57
7. நீங்கள் ‘நீதியின்படி தீர்ப்பு கொடுக்கிறீர்களா’?
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் யாரையாவது பற்றி ‘இவர்கள் இப்படித்தான்’ என்று முடிவு செய்கிறோம். சிலநேரம் யோசிக்காமல்கூட அப்படி முடிவு செய்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் எதைப் பார்க்கிறோமோ அதை வைத்துதான் மற்றவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆனால், நமக்கு முன்மாதிரியாக இருக்கிற இயேசு வேறுவிதமாக நடந்துகொண்டார். (ஏசா 11:3, 4) ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை இயேசுவினால் பார்க்க முடியும். ஒருவர் என்ன யோசிக்கிறார், ஏன் அப்படி யோசிக்கிறார், அவருடைய உள்நோக்கம் என்ன என்பதையெல்லாம் அவரால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், நமக்கு அந்தத் திறமை இல்லை. இருந்தாலும், இயேசுவைப் போலவே நடந்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். “வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.—யோவா 7:24.
நாம் பார்ப்பதை வைத்து எடைபோட்டால், ஊழியத்தில் நம் ஆர்வம் குறைந்துவிடும், ஊழியத்தை நன்றாகச் செய்ய முடியாமலும் போய்விடும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களிடம் நாம் பேச தயங்குகிறோமா? பணக்காரர்கள் அல்லது ஏழைகளிடம் பேச நாம் யோசிக்கிறோமா? ஒருவர் பார்க்க எப்படி இருக்கிறார் என்பதை வைத்தே அவர் கேட்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோமா? “எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” கடவுளுடைய விருப்பம்.—1தீ 2:4.
காவற்கோபுரம் சொல்லித்தந்த பாடங்கள்—வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
எதையெல்லாம் வைத்து மக்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று இந்த வீடியோவில் சொன்னார்கள்?
சபையிலும் இந்த மாதிரி பாகுபாடுகள் பார்த்தால், என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாமல் இருக்க இந்த வீடியோவில் வந்தவர்களுக்கு எது உதவியது?
அந்த காவற்கோபுர கட்டுரையிலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 46-47