உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 ஆகஸ்ட் பக். 32
  • படிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் முத்து முத்தான குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
  • புதையல்களைக் கண்டுபிடியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 ஆகஸ்ட் பக். 32

படிக்க டிப்ஸ்

யெகோவாவின் முத்து முத்தான குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பைபிளைப் படிக்கும்போது, படிப்பதை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நிறைய ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தலாம். இருந்தாலும், வெறுமனே அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமல்ல, யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் பாசம் இன்னும் அதிகமாவதற்காகவும் அப்படிச் செய்ய வேண்டும். அதனால், அவருடைய முத்து முத்தான குணங்களைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? ஒவ்வொரு தடவை பைபிளைப் படிக்கும்போதும், ‘இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொண்டேன்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, அன்பு, ஞானம், நீதி, வல்லமை போன்ற அருமையான குணங்களை யெகோவா எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நாம் முயற்சி செய்யலாம். ஆனால், இந்த நான்கு குணங்களை மட்டுமல்ல, இன்னும் நிறைய அழகான குணங்களை யெகோவா காட்டுகிறார். அவருடைய குணங்களைப் பற்றி நீங்கள் எங்கிருந்து தெரிந்துகொள்ளலாம்?

யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில், “யெகோவா தேவன்” என்ற தலைப்பின் கீழ் “யெகோவாவின் குணங்கள்” என்ற உபதலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குக் கீழே இருக்கும் தலைப்புகளில், நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பைபிள் பதிவில் வரும் குணங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்து பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்