உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
மே 5-11
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | மே

மே 5-11

நீதிமொழிகள் 12

பாட்டு 101; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கடின உழைப்பு பலன் தரும்

(10 நிமி.)

வீணான காரியங்களுக்குப் பின்னால் போய் நேரத்தை வீணடிக்காதீர்கள் (நீதி 12:11)

சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் உழையுங்கள் (நீதி 12:24; w16.06 பக். 30 பாரா 7)

கடினமாக உழைத்தால் உங்களுக்குப் பலன் கிடைக்கும் (நீதி 12:14)

படங்களின் தொகுப்பு: பைப்புகளைப் பொருத்தும் வேலையிலும் யெகோவாவின் சேவையிலும் ஒரு சகோதரர் கடினமாக உழைக்கிறார். 1. தன்னுடைய கருவிகளைக் கையில் எடுத்துக்கொண்டு நடக்கிறார். 2. ஒரு பெரிய பைப்பில் தன் பெரிய ஸ்பானரை வைத்து வேலை செய்கிறார். 3. தன் குடும்பத்தோடு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பதில் சொல்வதற்காக அவரும் அவருடைய சின்னப் பொண்ணும் கை தூக்குகிறார்கள். 4. துண்டுப்பிரதியைக் காட்டி பெட்ரோல் பங்க்கில் இருக்கும் ஒருவருக்கு சாட்சி கொடுக்கிறார்.

டிப்ஸ்: நம்முடைய கடின உழைப்பு மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் நமக்குத் திருப்தி கிடைக்கும்.—அப் 20:35; mwbr11.16 பக். 2 பாரா. 3-5.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 12:16—பிரச்சினைகளை நல்லபடியாக சமாளிக்க இந்த வசனத்தில் இருக்கும் நியமம் எப்படி உதவி செய்யும்? (ijwyp கட்டுரை 95 பாரா. 10-11)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 12:1-20 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) பிள்ளைகள் இருக்கிற ஒருவருக்கு நீங்கள் ஏற்கெனவே சந்தர்ப்ப சாட்சி கொடுத்திருக்கிறீர்கள். இப்போது அவரை மறுபடியும் சந்தித்து நம்முடைய வெப்சைட்டைக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(3 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 3—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதம் மட்டும்தான் உண்மையென நம்புகிறார்களா? (lmd பாடம் 4 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 21

8. பணப் பிரச்சினைகள் வந்தாலும் யெகோவா உதவி செய்வார்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வேலை கிடைக்குமா... வேலை போய்விடுமா... செலவுகளுக்குப் பணம் இருக்குமா... அல்லது வயதான பிறகு போதுமான வருமானம் இருக்குமா... என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உலகத்தின் பொருளாதார நிலைமை திடீர் திடீரென்று மாறுகிறது. ஆனால், யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால் நம்முடைய தேவைகளை எப்போதுமே அவர் கவனித்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், திடீரென்று பணப் பிரச்சினைகள் வந்தால்கூட நாம் கவலைப்பட வேண்டியதில்லை.—சங் 46:1-3; 127:2; மத் 6:31-33.

“யெகோவா எங்களைக் கைவிடவே இல்லை” வீடியோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரர் ஆல்வராடோ தன் குடும்பத்தோடு ஜெபம் செய்கிறார்; தன் மனைவியின் கையைப் பிடித்திருக்கிறார்.

யெகோவா எங்களைக் கைவிடவே இல்லை என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • சகோதரர் ஆல்வராடோவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

1 தீமோத்தேயு 5:8-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • யெகோவாவை வணங்குகிற நாம் எல்லாரும் அவருடைய குடும்பத்தில் இருக்கிறோம். நம்முடைய தேவைகளை அவர் எப்போதுமே கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை இந்த வசனம் எப்படிப் பலப்படுத்துகிறது?

இந்த பைபிள் ஆலோசனைகள் பணப் பிரச்சினைகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவும்:

  • உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்களையும் செலவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.—மத் 6:22

  • வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவுக்கு முதலிடம் கொடுங்கள்.—பிலி 1:9-11

  • மனத்தாழ்மையாக இருங்கள், வளைந்துகொடுங்கள். உங்களுக்கு வேலை போய்விட்டால், உங்கள் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக வேறெந்த வேலையையும் செய்யத் தயாராக இருங்கள். கவுரவக்குறைவான வேலைகளைச் செய்வதற்குக்கூடத் தயங்காதீர்கள்.—நீதி 14:23

  • உங்களிடம் நிறைய இல்லை என்றாலும், இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயாராக இருங்கள்.—எபி 13:16

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 26 பாரா. 1-8, பக். 204, 208-ல் இருக்கும் பெட்டிகள்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 57; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | மார்ச்

படிப்புக் கட்டுரை 9: மே 5-11, 2025

2 ஞானஸ்நானத்தை தள்ளிப்போடாதீர்கள்!

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்