ஜூன் 9-15
நீதிமொழிகள் 17
பாட்டு 157; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
ஒரு இஸ்ரவேலத் தம்பதி சமாதானமான சூழலில் எளிமையான உணவைச் சந்தோஷமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
1. துணையோடு சமாதானமாக இருங்கள்
(10 நிமி.)
சமாதானத்தைக் கட்டிக்காக்க நிறைய முயற்சி தேவை; நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வீண்போகாது (நீதி 17:1; படத்தைப் பாருங்கள்)
சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக்காதீர்கள் (நீதி 17:9; g 10/14 பக். 9 பாரா 2)
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் (நீதி 17:14; w08 7/1 பக். 10 பாரா 6–பக். 11 பாரா 1)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 17:24—என்ன விதத்தில் “புத்தி இல்லாதவனின் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்கின்றன”? (it-1 பக். 790 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 17:1-17 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 3 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 6 குறிப்பு 4)
6. பேச்சு
(5 நிமி.) ijwbv கட்டுரை 60—பொருள்: நீதிமொழிகள் 17:17-ன் அர்த்தம் என்ன? (th படிப்பு 13)
பாட்டு 113
7. நல்ல பேச்சுத்தொடர்புக்கு உதவும் பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நல்ல பேச்சுத்தொடர்பு ரொம்ப முக்கியம். குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாகப் பேசிக்கொள்ளும்போது, ஒன்றாகச் சேர்ந்து தங்கள் குறிக்கோள்களை அடைய முடியும், கஷ்டமான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருக்க முடியும். (நீதி 15:22) உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை நீங்கள் எப்படி உருவாக்கலாம்?
ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுங்கள். (உபா 6:6, 7) குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அன்றாட வேலைகளைச் செய்யும்போதும், கூட்டங்களுக்கோ ஊழியத்துக்கோ போகும்போதும், சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும்போதும் ஒருவருக்கொருவர் ரொம்ப நெருக்கமாக ஆவார்கள். அவர்களுக்குள் இருக்கும் அன்பும் நம்பிக்கையும் பலமாகும். மனம்விட்டு சந்தோஷமாகப் பேசுவதற்கும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும். சிலசமயங்களில் நீங்கள் ஏதோவொரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கலாம். ஆனால் உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் வேறொரு விஷயத்தைச் செய்ய நினைக்கலாம். அந்தச் சமயத்தில் நீங்கள் விட்டுக்கொடுக்கலாம். அப்படி நீங்கள் அன்பு காட்டுவது ஒருநாளும் வீண்போகாது. (பிலி 2:3, 4) நீங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?—எபே 5:15, 16.
குடும்ப சமாதானத்துக்கான வழிகாட்டியைப் பின்பற்றுங்கள்—நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
எலெக்ட்ரானிக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு எப்படி ஒரு தடையாக இருக்கலாம்?
நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்வது சம்பந்தமாக இந்த வீடியோவிலிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொண்டீர்கள்?
காதுகொடுத்துக் கேளுங்கள். (யாக் 1:19) அப்பா-அம்மா தங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள், தங்கள்மேல் கோபப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் மனம்விட்டுப் பேசுவார்கள். அதனால், பிள்ளைகள் சொல்லும் ஏதோவொரு விஷயம் உங்களுக்கு எரிச்சலாக இருந்தால்கூட நீங்கள் கோபப்படாமல் இருக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். (நீதி 17:27) அவர்கள் சொல்வதை அனுதாபத்தோடு கேளுங்கள். அவர்களுடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் அன்பான விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும், உங்களுடைய அன்பை அவர்களுக்குப் புரியவைக்கவும் முடியும்.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 27 பாரா. 19-22, பக். 212-ன் பெட்டி