உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 5
  • வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பெற்றோர்களே, கடவுளுடைய மனதை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 5
ஒரு டீனேஜ் பெண் தன்னுடைய ஃபோனை அம்மா அப்பாவிடம் காட்டுகிறாள். அவளுடைய மனதில் இருப்பதையெல்லாம் சொல்கிறாள். அவர்கள் கவனமாக கேட்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்

யாராவது நம்மை வம்பிழுத்தாலோ தொல்லை பண்ணினாலோ, அது உடலளவிலும் மனதளவிலும் நம்மை காயப்படுத்தலாம். அதோடு, நம்முடைய வணக்கத்தை அவர்கள் எதிர்ப்பதைப் பார்த்து பயந்து போய்விட்டால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை அது பாதித்துவிடலாம். அப்படியென்றால், அதை நாம் எப்படி சமாளிக்கலாம்?

யெகோவாவை வணங்குகிற நிறைய பேர், இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்போது அவரை முழுமையாக நம்பியிருப்பதன் மூலமாக அதை நல்லபடியாக சமாளித்திருக்கிறார்கள். (சங் 18:17) ஆமான் என்ற ஒரு மோசமானவனிடமிருந்து எஸ்தருக்கு பிரச்சினை வந்தது. அந்த சமயத்தில் அவனுடைய சதித்திட்டத்தைப் பற்றி எஸ்தர் தைரியமாக பேசினாள். (எஸ்தர் 7:1-6) ஆனால், அப்படி செய்வதற்கு முன்பு விரதம் இருப்பதன் மூலம் அவள் யெகோவாவை நம்பியிருப்பதை காட்டினாள். (எஸ்தர் 4:14-16) அதனால், யெகோவா அவளை ஆசீர்வதித்தார், அவளுடைய மக்களையும் காப்பாற்றினார்.

இளம் பிள்ளைகளே, உங்களை யாராவது வம்பிழுத்தாலோ தொல்லை பண்ணினாலோ அதைப் பற்றி யெகோவாவிடம் சொல்லுங்கள். பிறகு, அந்தப் பிரச்சினையைப் பற்றி உங்கள் அப்பா அம்மாவிடமோ முதிர்ச்சியுள்ள ஒருவரிடமோ பேசுங்கள். எஸ்தருக்கு யெகோவா எப்படி உதவினாரோ அதே மாதிரி உங்களுக்கும் உதவுவார் என்பதில் உறுதியாக இருங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

டீனேஜில் நான்—வம்பு பண்ணும்போது என்ன செய்வது? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சார்லி மற்றும் ஃபெரினின் உதாரணத்திலிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • அவர்கள் இரண்டு பேரும் சொன்ன விஷயங்களை வைத்து வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க பிள்ளைகளுக்கு எப்படி பெற்றோர்கள் உதவலாம்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்