உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 7
  • யெகோவாவின் மக்களுக்காகக் கடினமாக உழைக்கும் மேய்ப்பர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் மக்களுக்காகக் கடினமாக உழைக்கும் மேய்ப்பர்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • மூப்பர்களைக் கூப்பிடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • மூப்பர்களே, பாவம் செய்தவர்களுக்கு அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • சகோதரர்களே, மூப்பர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவின் மக்களுக்காகக் கடினமாக உழைக்கும் மேய்ப்பர்கள்

இன்றைக்கு நிறைய மக்களுக்கு அதிகாரத்தில் இருக்கிறவர்கள்மேல் ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால், காலங்காலமாகவே மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். (மீ 7:3) ஆனால், சபையில் இருக்கிற மூப்பர்கள் யெகோவாவின் மக்களுடைய நன்மைக்காக தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதற்கு, நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—எஸ்தர் 10:3; மத் 20:25, 26.

இன்று உலகத்தில் அதிகாரத்தில் இருக்கிறவர்களைப் போல் இல்லாமல், யெகோவாமேலும் அவருடைய மக்கள்மேலும் இருக்கிற அன்பால் மூப்பர்கள் கண்காணிகளாக சேவை செய்கிறார்கள். (யோவா 21:16; 1பே 5:1-3) இயேசுவின் வழிநடத்துதலின்கீழ், இந்த மூப்பர்கள் சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக உணர்வதற்கும், அவரோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுகிறார்கள். யாருக்காவது ஆன்மீக உதவி தேவைப்பட்டால் உடனே ஓடோடிப்போய் உதவுகிறார்கள். மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ பேரழிவு நடந்தாலோ தங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், உங்கள் சபையில் இருக்கிற மூப்பர்களிடம் அதை கேட்க தயங்காதீர்கள்!—யாக் 5:14.

“அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் மேய்ப்பர்கள்” என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. ஒரு மூப்பர் சந்தோஷமாக எலியாஸை கட்டி அணைத்துக்கொள்கிறார்.

அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் மேய்ப்பர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மூப்பர்கள் செய்த உதவியால் மரியானா எப்படி நன்மையடைந்தார்?

  • மூப்பர்கள் செய்த உதவியால் எலியாஸ் எப்படி நன்மையடைந்தார்?

  • இந்த அனுபவங்களைப் பார்த்த பிறகு, மூப்பர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மூப்பர்களிடம் தெரிவிக்க வேண்டியவை

  • உங்கள் ஃபோன் நம்பர் அல்லது முகவரி மாறினால்

  • கஷ்டமான ஒரு சோதனையை நீங்கள் சமாளித்துக்கொண்டு இருந்தால்

  • ரொம்ப நாளுக்கு நீங்கள் ஊரில் இருக்க மாட்டீர்கள் என்றால்

  • மோசமான உடல்நலத்தோடு போராடிக்கொண்டிருந்தால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்

  • பெரிய பாவத்தை செய்துவிட்டால்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்