கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பெத்தேலில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கான ஒரு ஏற்பாடு
எல்லாருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வருவதால் ஆறுதலும் உதவியும் எல்லாருக்குமே தேவை. யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தில் இருப்பவர்களும் அவருடைய அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களும்கூட சில சமயங்களில் சோர்ந்துபோகலாம். (யோபு 3:1-3; சங். 34:19) பெத்தேல் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கு செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“கடவுளை நம்புங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பெத்தேல் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு என்ன கஷ்டங்கள் வருகின்றன?
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக செய்யப்படுகிற நான்கு விஷயங்கள் என்ன?
மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்கிற சகோதரர்கள் இதனால் எப்படிப் பயன் அடைந்திருக்கிறார்கள்?