கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உத்தமமும் நாம் யோசிக்கிற விதமும்
நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை நம்முடைய சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, நாம் யோசிக்கிற விதத்திலும் காட்ட வேண்டும். (சங். 19:14) அதனால் உண்மையான, அதிமுக்கியமான, நீதியான, சுத்தமான, விரும்பத்தக்க, மெச்சத்தக்க, ஒழுக்கமான, பாராட்டுக்குரிய விஷயங்களையே யோசிக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (பிலி. 4:8) நம்முடைய மனதில் கெட்ட எண்ணங்கள் வரவே வராது என்று சொல்ல முடியாதுதான். இருந்தாலும் நமக்கு சுயக்கட்டுப்பாடு இருந்தால், கெட்ட எண்ணங்களை எடுத்துப் போட்டுவிட்டு, நல்ல எண்ணங்களால் நம் மனதை நிரப்ப முடியும். கடவுளுக்கு உண்மையாக இருக்க உதவுகிற காரியங்களை மட்டுமே நாம் யோசித்தால் நம்முடைய செயல்களிலும் உண்மையாக இருப்போம்.—மாற். 7:21-23.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் படித்துவிட்டு எப்படிப்பட்ட யோசனைகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று எழுதுங்கள்:
ரோ. 12:3
லூக். 12:15
மத். 5:28
பிலி. 3:13