உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 நவம்பர் பக். 32
  • நல்ல சூழலை உருவாக்குங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல சூழலை உருவாக்குங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 நவம்பர் பக். 32

படிக்க டிப்ஸ்

நல்ல சூழலை உருவாக்குங்கள்

பைபிளைப் படிக்கும்போது அதிலிருந்து இன்னும் நன்மையடைய நீங்கள் என்ன செய்யலாம்? படிப்பதற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்கலாம். இவற்றைச் செய்துபாருங்கள்:

  • நல்ல இடத்தைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை கசகச-என்று இல்லாத நேர்த்தியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். நல்ல வெளிச்சம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிளை நீங்கள் பயன்படுத்தலாம். வீட்டுக்கு வெளியேகூட உட்கார்ந்து படிக்கலாம்.

  • தனிமையான இடத்தைக் கண்டுபிடியுங்கள். இயேசு ஜெபம் செய்வதற்கு “விடியற்காலையில்” ‘தனிமையான ஓர் இடத்தை’ தேர்ந்தெடுத்தார். (மாற். 1:35) அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்பதை வீட்டில் இருக்கிறவர்களிடம் சொல்லி வையுங்கள். அந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சொல்லுங்கள்.

  • கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படிப்பதற்கு நீங்கள் ஃபோனையோ டேப்லெட்டையோ பயன்படுத்தினால், அது உங்களுக்குத் தொந்தரவு தராத விதத்தில் அதன் செட்டிங்கை மாற்றி வையுங்கள். அல்லது, ‘ஏர்பிலேன் மோடில்’ வையுங்கள். படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஏதோவொரு வேலை உங்களுக்கு ஞாபகம் வந்தால், அதை எங்கேயாவது எழுதி வைத்துவிட்டு, பிறகு செய்யுங்கள். கவனம் செலுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், கொஞ்சம் நடந்துவிட்டு வந்து படியுங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்