படிக்க டிப்ஸ்
படித்ததைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
படிப்பது நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நாம் கண்டுபிடித்த முத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டால் இன்னும் அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். நீதிமொழிகள் 11:25 இப்படிச் சொல்கிறது: “மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.”
படித்ததை மற்றவர்களிடம் சொல்லும்போது, அந்தக் குறிப்புகள் நம் மனதில் சுலபமாகப் பதியும், அவற்றை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் முடியும். அவை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்பதால், அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும்.—அப். 20:35.
இப்படிச் செய்து பாருங்கள்: படித்ததை மற்றவர்களிடம் சொல்ல இந்த வாரம் ஒரு வாய்ப்பைத் தேடிப் பாருங்கள். படித்த விஷயத்தை வீட்டிலோ, சபையிலோ, வேலையிலோ, பள்ளியிலோ, பக்கத்து வீட்டுக்காரரிடத்திலோ, ஊழியத்திலோ சொல்ல முயற்சி செய்யுங்கள். சொந்த வார்த்தைகளில், எளிமையாக... தெளிவாக... சொல்ல முயற்சி செய்யுங்கள்.
மறந்துவிடாதீர்கள்: மற்றவர்களைக் கவருவதற்காக அல்ல, உற்சாகப்படுத்துவதற்காக குறிப்புகளைச் சொல்லுங்கள்.—1 கொ. 8:1.