படிக்க டிப்ஸ்
தினமும் பைபிளை வாசிக்க டிப்ஸ்
நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதால் தினமும் பைபிளை வாசிப்பது கஷ்டமாக இருக்கிறதா? (யோசு. 1:8) அப்படியென்றால், இவற்றில் ஒன்றைச் செய்து பாருங்கள்:
அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். பைபிளை வாசிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துவதற்காக உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்தில் அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.
பார்வையில் படும் இடத்தில் பைபிளை வையுங்கள். அச்சடிக்கப்பட்ட பைபிளிலிருந்து படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், கண்ணில் படும் இடத்தில் அதைத் தினமும் வையுங்கள்.—உபா. 11:18.
ஆடியோவை கேளுங்கள். தினசரி வேலைகளைச் செய்துகொண்டே பைபிள் ஆடியோவை கேளுங்கள். தாரா என்ற ஒரு அம்மா, பயனியராகச் சேவை செய்கிறார்; நைட் ஷிஃப்டிலும் வேலை செய்கிறார். “வீட்டுவேலைகளைச் செய்துகொண்டே பைபிள் ஆடியோவை கேட்பதால், பைபிள் வாசிப்பைத் தவறவிடாமல் தொடர்ந்து செய்ய முடிகிறது” என்று சொல்கிறார்.
முயற்சியைக் கைவிடாதீர்கள். எதிர்பாராத சூழ்நிலைகளால் திட்டமிட்டபடி பைபிளை வாசிக்க முடியாமல் போகிறதா? அப்படியென்றால், தூங்குவதற்கு முன் கொஞ்சம் வசனங்களையாவது படியுங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்! கொஞ்சமாகப் படித்தாலும் பெரிய பலன்கள் கிடைக்கும்.—1 பே. 2:2.