36 அவர்களுடைய அப்பா யாக்கோபு அவர்களைப் பார்த்து, “உங்களால் என் பிள்ளைகள் எல்லாரையுமே பறிகொடுத்துவிடுவேன் போலிருக்கிறது!+ யோசேப்பு செத்துவிட்டான்,+ சிமியோனும் இல்லை,+ இப்போது பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். எல்லா கஷ்டங்களும் எனக்குத்தான் வந்துசேருகிறது!” என்று புலம்பினார்.