உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நோவாவின் வரலாறு இதுதான்.

      நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+

  • உபாகமம் 8:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பதன் மூலம் அவருடைய கட்டளைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

  • உபாகமம் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+

  • 3 யோவான் 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம்* எனக்கு வேறு எதுவும் இல்லை.+

  • யூதா 14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு+ அவர்களைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “இதோ! யெகோவா* தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு+ எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார். 15 கடவுள்பக்தி இல்லாத எல்லாரும் கடவுள்பக்தி இல்லாத விதத்தில் செய்த கடவுள்பக்தி இல்லாத எல்லா செயல்களுக்காகவும், கடவுள்பக்தி இல்லாத பாவிகள் தனக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சுக்காகவும்+ அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்க வந்தார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்