-
ஆதியாகமம் 37:31-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 அவர்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் அங்கியை முக்கியெடுத்தார்கள். 32 பின்பு, அந்த அங்கியைத் தங்களுடைய அப்பாவிடம் அனுப்பி, “இதை நாங்கள் எதேச்சையாகப் பார்த்தோம். இது உங்கள் மகனுடைய அங்கிதானா+ என்று தயவுசெய்து பாருங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள். 33 அவர் அதைப் பார்த்ததும், “இது என் மகனுடைய அங்கிதான்! ஐயோ! ஏதோவொரு காட்டு மிருகம் அவனை அடித்துப்போட்டிருக்கும்! அவனைக் கடித்துக் குதறியிருக்கும்!” என்று சொல்லி, 34 துக்கத்தில் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொண்டு, தன்னுடைய மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்.
-