-
2 பேதுரு 2:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 சோதோம், கொமோரா நகரங்களையும் தண்டித்தார்.+ கடவுள்பக்தி இல்லாதவர்களுக்கு வரப்போகும் முடிவு எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக+ அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார். 7 வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்ட நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.+ 8 அந்த நீதிமான் அவர்கள் மத்தியில் வாழ்ந்தபோது, தினம்தினம் அவர்களுடைய அக்கிரமச் செயல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வந்ததால் அவருடைய நீதியான உள்ளம் வாட்டிவதைக்கப்பட்டது.
-
-
யூதா 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதேபோல், சோதோம் கொமோராவிலும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்தத் தேவதூதர்களைப் போல் பாலியல் முறைகேட்டில்* மூழ்கியிருந்தார்கள். இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டார்கள்.+ அதனால், என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது.+
-