-
ஆதியாகமம் 19:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பொழுது விடியும் நேரத்தில் அந்தத் தேவதூதர்கள் லோத்துவிடம், “சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையென்றால், இந்த நகரம் அதன் அக்கிரமத்துக்காக அழிக்கப்படும்போது நீயும் அழிக்கப்படுவாய்!”+ என்று சொல்லி அவசரப்படுத்தினார்கள். 16 லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால்+ அந்த மனிதர்கள்* அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள்.+
-