10 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார். நீங்கள் இப்போது வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ண முடியாதளவுக்கு இருக்கிறீர்கள்.+
18 “இப்படித்தான் உன் சந்ததி எண்ணற்றதாக ஆகும்”+ என்று சொல்லப்பட்டது நடக்குமென்று விசுவாசம் வைத்தார். நிறைய தேசங்களுக்கு அவர் தகப்பன் ஆவார் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும் அதில் நம்பிக்கை வைத்தார்.
12 அதனால்தான், பிள்ளை பெற முடியாத*+ ஒரு மனிதருக்கு வானத்திலுள்ள ஏராளமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணற்ற மணலைப் போலவும்+ பிள்ளைகள் பிறந்தார்கள்.+