15அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.
5 அப்போது ஆபிராமைக் கடவுள் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “தயவுசெய்து வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடிந்தால் எண்ணு” என்றார். பின்பு, “இப்படித்தான் உன் சந்ததியும் எண்ணற்றதாக ஆகும்”+ என்றார்.
12 அதனால்தான், பிள்ளை பெற முடியாத*+ ஒரு மனிதருக்கு வானத்திலுள்ள ஏராளமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணற்ற மணலைப் போலவும்+ பிள்ளைகள் பிறந்தார்கள்.+