23 யெகோவா அவளிடம், “உன் வயிற்றில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.*+ உன்னிடமிருந்து இரண்டு தேசங்கள் உருவாகும்.+ ஒரு தேசம் மற்றொன்றைவிட பலமானதாக இருக்கும்.+ பெரியவன் சின்னவனுக்குச் சேவை செய்வான்”+ என்று சொன்னார்.
26 இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது.+ அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது.