35அதன்பின் யாக்கோபிடம் கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில்+ குடியிரு. உன் அண்ணன் ஏசாவிடமிருந்து நீ தப்பித்து ஓடியபோது+ உன் முன்னால் தோன்றிய உண்மைக் கடவுளுக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டு” என்றார்.
7 அங்கே அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்துக்கு எல்-பெத்தேல்* என்று பெயர் வைத்தார். ஏனென்றால், அவர் தன்னுடைய அண்ணனிடமிருந்து தப்பித்து ஓடியபோது உண்மைக் கடவுள் அங்கேதான் அவர்முன் தோன்றினார்.+