-
உபாகமம் 17:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போய் அதில் குடியிருக்கும்போது, ‘சுற்றியுள்ள தேசத்தாரைப் போல நாமும் ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று நீங்கள் சொன்னால்,+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற ராஜாவை மட்டும்தான் நீங்கள் நியமிக்க வேண்டும்.+ உங்கள் சகோதரர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக்க வேண்டும். வேறு தேசத்தைச் சேர்ந்தவனை ராஜாவாக்கக் கூடாது.
-
-
1 நாளாகமம் 1:43-50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
43 இஸ்ரவேலர்களை ராஜாக்கள் ஆட்சி செய்வதற்குமுன் ஏதோம்+ தேசத்தை ஆட்சி செய்த ராஜாக்களின் விவரம் இதுதான்:+ பெயோரின் மகன் பேலா; அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் தின்காபா. 44 பேலா இறந்தபின், போஸ்றாவைச்+ சேர்ந்த சேராகுவின் மகன் யோபாப் ஆட்சிக்கு வந்தான். 45 யோபாப் இறந்த பின்பு, தேமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான். 46 ஊசாம் இறந்த பின்பு, பேதாத்தின் மகன் ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் மோவாப் பிரதேசத்தில் மீதியானியர்களைத் தோற்கடித்திருந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் ஆவீத். 47 ஆதாத் இறந்த பின்பு, மஸ்ரேக்காவைச் சேர்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான். 48 சம்லா இறந்தபின், ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரெகொபோத்தைச் சேர்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான். 49 சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால்-கானான் ஆட்சிக்கு வந்தான். 50 பாகால்-கானான் இறந்தபின், ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் பாகு. அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகள், மேசகாப்பின் பேத்தி.
-