38 ஆனால் அவர், “என் மகனை நான் உங்களோடு அனுப்ப மாட்டேன். அவனுடைய அண்ணன் செத்துப்போய்விட்டான், இப்போது இவன் மட்டும்தான் இருக்கிறான்.+ போகும் வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள் போவேன்”+ என்றார்.
29 இவனையும் நீங்கள் என்னிடமிருந்து கூட்டிக்கொண்டு போய், வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் மிகுந்த துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள்+ போவேன்’ என்றார்.
10 உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில்* வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.+
13 கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+