8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+
4 விசுவாசத்தால்தான் ஆபேல், காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார்.+ அதனால் அவர் நீதிமான் என்று நற்சாட்சி பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரே.*+ அவர் இறந்துபோனாலும் தன்னுடைய விசுவாசத்தால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.+