-
யாத்திராகமம் 25:10-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 வேல மரத்தில் நீங்கள் ஒரு பெட்டியைச் செய்ய வேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும்,* அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்க வேண்டும்.+ 11 பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 12 தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலேயும் பொருத்த வேண்டும். இரண்டு வளையங்களை ஒரு பக்கத்திலும், மற்ற இரண்டு வளையங்களை இன்னொரு பக்கத்திலும் பொருத்த வேண்டும். 13 வேல மரத்தில் கம்புகள் செய்து, அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.+ 14 பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் அந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும். 15 அந்தக் கம்புகளைப் பெட்டியின் வளையங்களிலிருந்து கழற்றவே கூடாது.+
-