46 இந்த எல்லா லேவியர்களையும் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மோசேயும் ஆரோனும் ஜனங்களின் தலைவர்களும் பெயர்ப்பதிவு செய்தார்கள். 47 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள அந்த ஆட்கள் எல்லாரும் சந்திப்புக் கூடார வேலைகளுக்கும் அதன் பொருள்களைச் சுமக்கிற வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டார்கள்.+