2 அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 3 அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள்.+ எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.+