21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+
28 இஸ்ரவேலர்களைக் கடலுக்குள் துரத்திச்சென்ற பார்வோனின் போர் ரதங்களும் குதிரைப்படைகளும் மற்ற எல்லா படைகளும் புரண்டுவந்த தண்ணீரில் மூழ்கிப்போயின.+ ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.+