உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 20:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “உன் கையில் கோலை எடுத்துக்கொள். நீயும் உன் அண்ணன் ஆரோனும் ஜனங்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுங்கள். அந்தக் கற்பாறை தண்ணீரைத் தரும்படி அவர்களுடைய கண் முன்னால் அதனிடம் பேசுங்கள். இப்படி, அந்தக் கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவைத்து, அதை ஜனங்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் குடிக்கக் கொடுங்கள்”+ என்றார்.

  • உபாகமம் 8:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+ 15 விஷப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, தண்ணீரில்லாத பயங்கரமான பெரிய வனாந்தரத்தின் வழியாக உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த கடவுளை மறந்துவிடக் கூடாது.+ அவர் உங்களுக்காகக் கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாய்ந்துவரச் செய்தார்.+

  • நெகேமியா 9:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர்களுக்குப் பசியெடுத்தபோது வானத்திலிருந்து உணவைக் கொடுத்தீர்கள்,+ தாகமெடுத்தபோது கற்பாறையிலிருந்து தண்ணீரைத் தந்தீர்கள்.+ நீங்கள் கொடுப்பதாக உறுதிமொழி தந்த தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னீர்கள்.

  • சங்கீதம் 78:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வனாந்தரத்தில் பாறைகளைப் பிளந்தார்.

      நீரூற்றுபோல் பொங்கி வந்த தண்ணீரால் அவர்களுடைய தாகத்தைத் தீர்த்தார்.+

  • சங்கீதம் 105:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 கற்பாறையைப் பிளந்து தண்ணீரைப் பாய்ந்தோட வைத்தார்.+

      அது பாலைவனத்தில் ஆறாய் ஓடியது.+

  • 1 கொரிந்தியர் 10:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+

  • 1 கொரிந்தியர் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கடவுள் கொடுத்த தண்ணீரையே எல்லாரும் குடித்தார்கள்.+ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் தோன்றிய கற்பாறையின் தண்ணீரைக் குடித்தார்கள். கடவுள் தந்த அந்தக் கற்பாறை கிறிஸ்துவைக் குறித்தது.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்