26 அவற்றின் தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேல் நீலமணிக் கல்லைப் போல+ ஒன்று தெரிந்தது. அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.+ மனுஷ சாயலில் ஒருவர் அந்தச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்.+
3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+