-
யாத்திராகமம் 37:10-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பின்பு, அவர் இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும்+ வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்தார். 11 அதற்குச் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார், விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 12 நான்கு விரலளவு அகலத்துக்கு* சுற்றிலும் சட்டம் அடித்து, அந்தச் சட்டத்தின் ஓரங்களில் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 13 பின்பு, தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, மேஜையின் நான்கு கால்கள் இணைக்கப்பட்டுள்ள நான்கு மூலைகளிலும் பொருத்தினார். 14 இந்த வளையங்களைச் சட்டத்துக்குப் பக்கத்தில் பொருத்தினார். மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக இந்த வளையங்களைச் செய்தார். 15 பின்பு, மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளை வேல மரத்தால் செய்து, தங்கத்தால் தகடு அடித்தார்.
-