-
யாத்திராகமம் 39:8-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அதன்பின், ஏபோத்துக்குச் செய்தது போலவே மார்ப்பதக்கத்துக்கும்+ தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 9 இரண்டாக மடிக்கும்போது அது சதுரமாக, ஒரு சாண்* நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருந்தது. 10 அவர்கள் அதில் நான்கு வரிசையாகக் கற்களைப் பதித்தார்கள். முதலாம் வரிசையில் மாணிக்கம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றைப் பதித்தார்கள். 11 இரண்டாம் வரிசையில் நீலபச்சைக் கல், நீலமணிக் கல், சூரியகாந்தக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 12 மூன்றாம் வரிசையில் கெம்புக் கல்,* வைடூரியம், செவ்வந்திக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். 13 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல் ஆகியவற்றைப் பதித்தார்கள். இவற்றைத் தங்க வில்லைகளில் பதித்தார்கள். 14 இந்த 12 கற்களும் இஸ்ரவேலின் மகன்களுடைய 12 பெயர்களின்படி இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு பெயர் என 12 கோத்திரங்களின் பெயர்களும் முத்திரையாகப் பொறிக்கப்பட்டன.
-