-
யாத்திராகமம் 39:27-29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 ஆரோனுக்காகவும் அவருடைய மகன்களுக்காகவும் உயர்தர நாரிழையால் நெய்யப்பட்ட அங்கிகளையும்,+ 28 தலைப்பாகையையும்,+ அலங்கரிக்கப்பட்ட முண்டாசையும்+ செய்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழையால் அரைக் கால்சட்டைகளையும்+ செய்தார்கள். 29 அதோடு, உயர்தரமான திரித்த நாரிழை, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இடுப்புக்கச்சையை நெய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
-