-
யாத்திராகமம் 37:25-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 தூபம் போடுவதற்காக வேல மரத்தால் ஒரு பீடம் செய்தார்.+ அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஒரு முழமாகவும் அகலம் ஒரு முழமாகவும் உயரம் இரண்டு முழமாகவும் இருந்தது. அதனுடன் இணைந்தபடி கொம்புகள் இருந்தன.+ 26 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 27 அதைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்தினார். 28 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார்.
-