உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 16:39, 40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.

  • 1 சாமுவேல் 2:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 கடவுளால் அனுப்பப்பட்ட ஒருவர் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் மூதாதையின் வம்சத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தபோது நான் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியப்படுத்தினேன்.+ 28 என் சன்னிதியில் குருவாகச் சேவை செய்யவும், என் பலிபீடத்தில்+ பலிகள் செலுத்தவும், தூபம் காட்டவும்,* ஏபோத்தைப் போட்டுக்கொள்ளவும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திலிருந்தும் உன் மூதாதையைத் தேர்ந்தெடுத்தேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் கொண்டுவந்த தகன பலிகளில் அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் பங்கு கொடுத்தேன்.+

  • லூக்கா 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 குருத்துவப் பணியின் வழக்கப்படி, தூபம் காட்டுவதற்கு+ சகரியாவின் முறை வந்தபோது அவர் யெகோவாவின்* ஆலயத்துக்குள்+ போனார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்