4 யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.+ பின்பு அவர் விடியற்காலையில் எழுந்து, அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிப்பதற்காக 12 கல்தூண்களையும் நாட்டினார்.
11 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற இடத்திலே அவர் முன்னிலையில் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வர வேண்டும்.+ அவர் குறித்திருக்கிற அந்தச் சமயத்தில், அவர்களுடைய காதில் விழும்படி இந்தத் திருச்சட்டத்தை நீங்கள் வாசிக்க வேண்டும்.+