6 அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+
36அதோடு, “பெசலெயேலுடன் அகோலியாபும் மற்ற திறமைசாலிகளும் சேர்ந்து வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த வேலைகளைச் செய்வார்கள். யெகோவா சொன்னபடியே அந்த வேலைகளைச் சரியாகச் செய்ய யெகோவா அவர்களுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தந்திருக்கிறார்”+ என்று மோசே சொன்னார்.