-
யாத்திராகமம் 29:16-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி.+ 17 செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவு.+ அதன் தலையையும் மற்ற எல்லா துண்டுகளையும் அதனதன் இடத்தில் வை. 18 முழு செம்மறியாட்டுக் கடாவையும் பலிபீடத்தின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.
-
-
லேவியராகமம் 8:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு, தகன பலி செலுத்த செம்மறியாட்டுக் கடாவை மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 19 மோசே அதை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார். 20 அந்தச் செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தார். 21 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவிய பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடா முழுவதையும் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்தினார். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
-
-
லேவியராகமம் 9:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு, தகன பலிக்கான கடாவை ஆரோன் வெட்டினார். அவருடைய மகன்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 13 அவர்கள் தகன பலிக்கான அந்தக் கடாவின் துண்டுகளை அதன் தலையோடு சேர்த்து அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப் பலிபீடத்தின் மேல் எரித்தார். 14 அதோடு, அதன் குடல்களையும் கால்களையும் கழுவி, அவற்றைத் தகன பலியின் மேல் வைத்து எரித்தார்.
-