-
லேவியராகமம் 11:21-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகளில், தாவிப்போவதற்கு நீளமான கால்கள் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் சாப்பிடலாம். 22 அவற்றில் நீங்கள் இதையெல்லாம் சாப்பிடலாம்: பல வகையான வெட்டுக்கிளிகள்,+ சிள்வண்டுகள், தத்துக்கிளிகள். 23 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த மற்ற எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 24 அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+
-