23 ‘பலிபீடம் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட பின்பு, நீ குறையில்லாத ஒரு இளம் காளையையும் குறையில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் கொடு. 24 அவற்றை யெகோவாவுக்குக் கொடு. குருமார்கள் அவற்றின் மேல் உப்பைத் தூவி,+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்துவார்கள்.