உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “தொழுநோயாளிகளையும்+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவர்களையும்+ பிணத்தால் தீட்டுப்பட்டவர்களையும்+ முகாமிலிருந்து அனுப்பிவிடும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.

  • எண்ணாகமம் 12:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது யெகோவா மோசேயிடம், “இவளுடைய அப்பா இவள் முகத்தில் காறித் துப்பினால், இவள் ஏழு நாட்கள் வெட்கப்பட வேண்டாமா? அதுபோலவே, ஏழு நாட்கள் இவள் முகாமுக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்,+ அதன்பின் இவளை உள்ளே கூட்டிக்கொண்டு வரலாம்” என்றார்.

  • 2 ராஜாக்கள் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நகரத்தின் நுழைவாசலுக்குப் பக்கத்தில் தொழுநோயாளிகள் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.+ அவர்கள், “நாம் ஏன் இங்கேயே கிடந்து சாக வேண்டும்?

  • 2 நாளாகமம் 26:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 முதன்மை குருவான அசரியாவும் மற்ற குருமார்கள் எல்லாரும் அவரைப் பார்த்தபோது, அவருடைய நெற்றியில் தொழுநோய் வந்திருந்தது. யெகோவா அவருக்குத் தண்டனை கொடுத்ததால், அவரை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். அவரும் வேகமாக வெளியேறினார்.

      21 சாகும்வரை உசியா ராஜா தொழுநோயாளியாக இருந்தார். அதனால், யெகோவாவின் ஆலயத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.+ ஒரு தனி வீட்டில் வாழ்ந்துவந்தார். அந்தச் சமயத்தில், அவருடைய மகன் யோதாம் அரண்மனையைக் கவனித்துக்கொண்டு, தேசத்து மக்களுக்கு நீதி வழங்கிவந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்