24 அதன் தலையில் அவர் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படும் இடத்தில் அதை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி.
26 சமாதான பலியின் கொழுப்பை எரிப்பது போலவே இதன் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ இப்படி, கோத்திரத் தலைவர் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அந்தக் கோத்திரத் தலைவருடைய பாவம் மன்னிக்கப்படும்.