22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.
15 யெகோவா முன்னால் இப்படி ஜெபம் செய்தார்:+ “யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே,+ நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள்.